புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 23 நவம்பர் 2022 (11:32 IST)

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறதா?

online
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
அனைத்துவகை ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் 28% ஜிஎஸ்டி வரி விதிக்க மாநில நிதி அமைச்சர்கள் கொண்ட குழு பரிந்துரை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 
தற்போது ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வரும் நிலையில் அது அதிகபட்ச வரம்பான 28 சதவீதத்தை விதிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்திருப்பதாகவும், இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
ஜிஎஸ்டி கவுன்சில் இதுகுறித்த முடிவை பரிசீலனை செய்யுமாறு அமைச்சர்கள் குழுவுக்கு அனுப்பி இருந்ததாகவும் ஆனால் அமைச்சர்கள் குழு 28 சதவீத ஜிஎஸ்டி மீண்டும் பரிந்துரை செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன
 
 
Edited by Mahendran