உத்தரகாண்ட் பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு… 171 பேரின் நிலை மர்மம்!
உத்தரகாண்ட் பெருவெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் 27 உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக தௌலிங்கா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு அதிகமானது. இதனால் கரையோரம் தங்கியிருந்தவர்களின் குடிசைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் சுமார் 200 ஐ தொடும் என சொல்லப்படுகிறது. இப்போது அங்கே மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி 27 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர். இன்னும் காணாமல் போனவர்களாக சொல்லப்படும் 171 நிலை என்ன ஆனது என்பது தெரியவில்லை. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என சொல்லப்படுகிறது.