தொடர்புடைய செய்திகள்
- ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்! எச்.ராஜா அறிவிப்பால் பரபரப்பு
- சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்: தமிழிசைக்கு ஸ்டாலின் நறுக் பதிலடி
- அதிமுக மத்திய அரசிடம் மண்டியிட தயாராக உள்ளது: ஸ்டாலினா இப்படி பேசியது?
- ராஜா ராணி புகழ் ஆல்யாவை பழிதீர்த்த சஞ்சீவ்!
- ராகுல் காந்தி, ஸ்டாலின் கலந்து கொள்ளவிருந்த மாநாடு திடீர் ஒத்திவைப்பு
ஸ்டாலின் சவாலை ஏற்க தயார்! எச்.ராஜா அறிவிப்பால் பரபரப்பு
திமுக தலைவர் ஸ்டாலின் விட்ட சவாலை தான் ஏற்க தயார் என்றும், இந்த சவாலில் வெற்றி பெறுவது யார்? என்று பார்த்துவிடுவோம் என்று பாஜக தேசிய செயலாளர் எதிர்சவால் விடுத்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் திருச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'இப்படியே போனால் தமிழகத்திற்குள் மோடியை நுழைய விடாமல் செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் சவால் விட்டார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள எச்.ராஜா தனது டுவிட்டரில் கூறியதாவது: சவாலை ஏற்போம்: தமிழகத்துக்குள் மோடி நுழைய முடியாத சூழ்நிலை ஏற்படுத்துவாராம் ஸ்டாலின். பாஜக இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாது. ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ஒரு பைசா குறைக்கக் கோரி போராடிய விவசாயிகளை சுட்டக் கொன்ற திமுக விவசாயிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பதா.? நடிப்பதா? என்று பதிவு செய்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
