திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 29 மே 2018 (17:09 IST)

தெருவில் விளையாடிய 2வயது குழந்தையை கடித்து குதறிய தெருநாய்கள்!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 2வயது பெண் குழந்தை தெரு நாய்கள் கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தது.

 
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டம் பீம் நகரைச் சேர்ந்த 2வயது பெண் குழந்தை தெருவில் சிறுவர்களுடன் விளையாடியுள்ளது. அப்போது அந்த பகுதியில் சுற்றுத்திரிந்த தெருநாய்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை மற்றும் சிறுவர்களை கடித்துள்ளது.
 
சிறுவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நாய்களை அடித்து விரட்டினர். பின்னர் அந்த 2வயது குழந்தை மற்றும் சிறுவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
2வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.