செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 26 மே 2018 (11:42 IST)

பாம்பு கடித்தது தெரியாமல் பால் கொடுத்த தாயும், குழந்தையும் பலி

உத்தரபிரேதசத்தில் இரவில் தூங்கும் போது பாம்பு கடித்தது தெரியாமல் பாலூட்டியதால் தாய், குழந்தை என இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
உத்தரப்பிரேதச மாநிலத்தில் உள்ள மண்ட்லா கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முந்தினம் இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. இது தெரியாமல் அவர் உறங்கிக் கொண்டிருந்தார். 
 
இதற்கிடையே, அவரது இரண்டரை வயது குழந்தை பசியால் அழுதுள்ளது. தன்னை பாம்பு கடித்தது என்று தெரியாத அவர் தனது குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். இதனால் அவர்களின் இருவரின் உடல்நிலையும் சிறிது நேரத்தில் கவலைக்கிடம் ஆனது.
 
இதனை கண்டு அவரது உறவினர்கள் இருவரையும் அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்குள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.