வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (14:49 IST)

காதலை முறித்த +2 மாணவி; உயிரோடு கொளுத்திய முன்னாள் காதலன்! - ஆந்திராவில் அதிர்ச்சி!

ஆந்திராவில் தனது காதலை முறித்துக் கொண்ட +2 மாணவியை காதலன் தீ வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே விக்னேஷிற்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்ததால் பள்ளி மாணவி தனது காதலை முறித்துக் கொண்டுள்ளார்.

 

ஆனால் வேறு பெண்ணை திருமணம் செய்த பிறகும் கூட தொடர்ந்து மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் விக்னேஷ். ஒருநாள் மாணவியை தனிமையில் சந்திக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் விக்னேஷ் மிரட்டியுள்ளார். இதனால் விக்னேஷ் சொன்ன இடத்திற்கு மாணவி சென்ற நிலையில் அங்கு வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்ய விக்னேஷ் முயன்றுள்ளார்.
 

 

பின்னர் மாணவி இந்த உண்மைகளை வெளியே சொல்லி விடுவார் என பயந்த விக்னேஷ், மாணவியை தாக்கி அவரது துணியில் சிகரெட் லைட்டரால் தீ வைத்துள்ளார். உடலில் தீப்பற்றி மாணவி அலறும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வர விக்னேஷ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

 

பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி மேற்படி சம்பவங்களை தனது வாக்குமூலத்தில் தெரிவித்த பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வாக்குமூலத்தின் படி வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான விக்னேஷை தேடி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K