வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 17 மே 2021 (06:40 IST)

இன்று முதல் இ-பாஸ் அவசியம்: ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நேற்று கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்தை தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று முதல் மாவட்டங்களில் இடையே பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டுமானால் இ-பதிவு செய்ய வேண்டியது அவசியம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இன்று முதல் இ-பதிவு அவசியம் என்றும் உரிய ஆவணங்களைக் கொண்டு இணையதளத்தில் ஆன்லைன் மூலமே இ-பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அவ்வாறு பதிவு செய்தால் மட்டுமே மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய முடியும் என்றும் அறிவித்துள்ளது
 
ஆன்லைனில் இ-பதிவு செய்வது மிகவும் எளிது என்பதால் அதனை பொதுமக்கள் கடைப்பிடித்து தற்போது மாவட்டங்களில் இடையே பயணம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின்போதும் இதே போன்று மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு அவசியம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது