வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (14:57 IST)

அக்டோபர் மாதம் 19 நாட்கள் வங்கி விடுமுறை!

அக்டோபர் மாதத்தில் 19 நாட்கள் வங்கி விடுமுறை என செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் 5 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாம் சனி, நான்காம் சனி என 7 நாட்கள் விடுமுறை உள்ள நிலையில் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அக்டோபர் 14, 15 விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை மற்றும் அக்டோபர் 19ஆம் தேதி மிலாடி நபி ஆகிய தினங்கள் விடுமுறை வருகிறதூ.
 
இந்த நிலையில் ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஒருசில மாநிலங்களில் மட்டும் மொத்தம் 19 நாட்கள் விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்
 
அக்டோபர் 1 அரையாண்டு கணக்கு முடிவு சிக்கிம்
 
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி
 
அக்டோபர் 3 ஞாயிறு
 
அக்டோபர் 6 மஹாளய அமாவாசை திரிபுரா, கர்நாடகா, மேற்கு வங்கம்
 
அக்டோபர் 7 மேரா சவுரென் ஹவுபா லெய்னினங்தோ சனமஹி மணிப்பூர்
 
அக்டோபர் 9 சனிக்கிழமை
 
அக்டோபர் 10 ஞாயிறு
 
அக்டோபர் 12 மஹா சப்தமி திரிபுரா, கர்நாடகா
 
அக்டோபர் 13 மஹா அஷ்டமி திரிபுரா, ஒடிசா, சிக்கிம், அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம், பீஹார், ஜார்க்கண்ட்.
 
அக்டோபர் 16 துர்கா பூஜா சிக்கிம்
 
அக்டோபர் 17 ஞாயிறு
 
அக்டோபர் 18 கதி பிஹு அசாம்
 
அக்டோபர் 19 மிலாடிநபி
 
அக்டோபர் 20 மகரிஷி வால்மிகி ஜெயந்தி திரிபுரா, கர்நாடகா, சண்டிகர், மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம்
 
அக்டோபர் 22 மிலாடிநபியை தொடர்ந்து வரும் வெள்ளி ஜம்மு - காஷ்மீர்
 
அக்டோபர் 23 4வது சனிக்கிழமை
 
அக்டோபர் 24ஞாயிறு
 
அக்டோபர் அக்செஷன் டே ஜம்மு - காஷ்மீர்
 
அக்டோபர் 31 ஞாயிறு
 
 
 
இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது