1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 15 செப்டம்பர் 2021 (14:51 IST)

இது மோடி குடுத்த பணம்.. நான் தர மாட்டேன்! – பீகாரில் கிராமவாசி அட்ராசிட்டி!

பீகாரில் தவறுதலாக வங்கி கணக்கில் வந்த பணத்தை பிரதமர் கொடுத்தது என கிராமவாசி ஒருவர் தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வென்று ஆட்சியமைத்தபோது பிரதமர் மோடி அனைத்து மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் அளிக்க உள்ளதாக வெளியான போலியான தகவல் இன்றும் நாடு முழுவதும் பரவலாக நம்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பீகாரில் வங்கி கணக்கு ஒன்றில் ரூ.5 லட்சம் வரவு வைக்கப்பட்ட போது தவறுதலாக பீகார் கிராமவாசி ஒருவரின் கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. தவறாக பணம் அனுப்பப்பட்டதை தாமதமாகவே உணர்ந்த வங்கி அதிகாரிகள் சில நாட்களில் கிராமவாசியை தேடி சென்று பணத்தை கேட்டுள்ளனர்.

ஆனால் அந்த நபரோ பிரதமர் மோடி அனுப்பிய பணத்தின் முதல் தவணை என நினைத்து அந்த ரூ.5 லட்சத்தை செலவு செய்துவிட்டதாக கூறியுள்ளார். பணத்தை திரும்ப செலுத்த சொல்ல அவ்வளவு பணத்துக்கு எங்கே செல்வது என திடுக்கிட்டுள்ளார். இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.