1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (14:15 IST)

18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து; டி.ஜி.சி.ஐ. அதிரடி நடவடிக்கை

இந்தியாவில் போலி மருந்து உற்பத்தி விவகாரத்தில் 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் நாடு முழுவதும் 20 மாநிலங்களில் உள்ள 76 மருந்து நிறுவனங்களில் ஆய்வு செய்தது. இதில் போலி மருந்து தயாரிப்பதாக 18 மருந்து நிறுவனங்களின் உரிமைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் 70 நிறுவனங்கள், உத்தரகாண்ட் மாநிலத்தில் 45 நிறுவனங்கள், மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தில் 23 நிறுவனங்கள் போலி மருந்துகள் தொடர்புடையதாக இருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மருந்து நிறுவனங்கள் தயாரித்த மாத்திரைகள் இருமல் மருந்துகள் ஊசிகள் ஆகியவை குறித்து விளக்கம் கேட்கப்பட்டு உள்ளதாகவும் இது குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் கூறியுள்ளது. மேலும் உடனடியாக இந்த மருந்துகளை தயாரிப்புகளை நிறுத்தவும் இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு கழகம் உத்தரவிட்டு உள்ளது.

Edited by Mahendran