திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 ஏப்ரல் 2023 (09:12 IST)

இறப்பை முன்பே கணித்து மனைவிக்கு விவாகரத்து கொடுத்த இந்திய டாக்டர்..!

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய டாக்டர் ஒருவர் தன்னுடைய இறப்பை முன்பே கணித்து தன்னுடைய மனைவிக்கு விவாகரத்து கொடுத்து அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆஸ்திரேலியாவில் மருத்துவர் ஆக இருக்கும் ஹர்ஷவர்த்தனன் என்ற 33 வயது நபர் தெலுங்கானாவை சேர்ந்தவர். இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதை அடுத்து தனது மரணம் உறுதி என்பதை தெரிந்து கொண்டார்.
 
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தன் மரணத்தை தெரிந்து கொண்ட அவர் தனக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினர் சிரமக்கூடது என்பதற்காக அனைத்து பொருளாதார தேவையும் முன்னேற்பாடுகள் உள்ளார்.
 
அதுமட்டுமின்றி தனது மரணத்திற்கு பிறகு மனைவி தனியாக இருக்கக் கூடாது என்பதற்காக அவரை வற்புறுத்தி விவாகரத்தும் செய்துள்ளார். மேலும் இறந்தபின் தனது உடலை இறந்தபின் இந்தியா கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் முன்கூட்டியே செய்துள்ளார். அவரது இந்த செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva