அத்துமீறலில் ஈடுபடும் பயணிகளை விமானத்தில் பயணிக்கத் தடை !-சிவில் விமான போக்குவரத்து இயக்குரகம்
அத்துமீறலில் ஈடுபடும் பயணிகளை விமானத்தில் பயணிக்கத் தடை விதிக்கப்படலாம் என்று சிவில் விமான போக்குவர்த்து இயக்குனர் ரவீந்திரகுமார் கடிதம் எழுதியுள்ளார்.
சமீபகாலமாக விமானங்களில் செல்லும் போது, நடுவானில், பயணிகளை அச்சுறுத்தும் விதமாக கதவுகளை திறப்பது, சிறுநீர்கழிப்பது , மது அருந்திவிட்டு பிரச்சனை செய்வ்து உள்ளிட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், விமானத்தில், புகைப்பிடித்தல், மது அருந்துதல், பயணிகளுக்கு இடையே மோதல், பாலியல் தொந்தரவு உள்ளிட்ட சம்பவங்களை கையாள்வது சம்பந்தப்பட்ட விமான நிலையங்களின் பொறுப்பு என்றும், ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்ளுத உள்ளிட்ட நிகழ்வுகள் விமான நிறுவனங்கள் வகைப்படுத்த வேண்டும் என்று அறுவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமானப் பயணத்தின்போது விதிகளை மீறுவோர் சகப் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோருக்கு விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படும் என்று சிவில் விமான போக்குவரத்து இயக்குரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.