தொடர்புடைய செய்திகள்
- வட மாநிலங்களில் வீசும் வெப்ப அலை.! ஏ.சி பற்றி எறிந்ததால் பரபரப்பு..!
- ஆளில்லா கிராமம் ஆனது தூத்துகுடி மாவட்ட மீனாட்சிபுரம்.. ஒரே நபரும் உயிரிழப்பு..!
- சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த மாணவிகள்.. அரசு பள்ளியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!
- வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு எஸ்.ஐ மாரடைப்பால் உயிரிழப்பு.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!
- 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!
பீகார் மாநிலத்தில் வீசிய வெப்ப அலை.. 2 மணி நேரத்தில் 16 பேர் உயிரிழந்தால் அதிர்ச்சி..!
பீகார் மாநிலத்தில் வெப்ப அலை வீசி வருவதை அடுத்து இரண்டு மணி நேரத்தில் 16 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களாகவே பீகார் மாநிலத்தில் கடும் வெப்பம் நிலவி வருகிறது என்பதும் அவ்வப்போது வெப்ப அலை வீசி பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அரசு பள்ளியை சேர்ந்த இரண்டு மாணவிகள் வெப்ப அலை காரணமாக மயக்கம் போட்டு விழுந்தனர் என்பதும் இதையடுத்து அவர்களுக்கு உடனடியாக முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று பீகாரில் திடீரென வீசிய வெப்ப அலை காரணமாக இரண்டு மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் அடுத்தடுத்து 16 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\
இதனை அடுத்து பீகார் மாநிலத்தில் வெப்ப அலையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மதிய நேரத்தில் யாரும் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Edited by Siva
