வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2023 (20:20 IST)

தெலங்கானா தேர்தலையொட்டி Rapido அசத்தல் அறிவிப்பு

rapido
தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த வாக்குகள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.
 
இந்த நிலையில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில்  ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றன.
 
இந்த நிலையில், ரேபிடோ நிறுவனம் தேர்தல் முன்னெடுப்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
அதில், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்குச் செல்லும் மக்களுக்கு இலவசமாக பைக்   சேவையை வழங்குவதாக ரேபிடோ நிறுவனம் அறிவித்துள்ளது.
 
மேலும்,    வரும்  நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள  வாக்குப்பதிவில் வாக்குப்பதிவை அதிகரிக்கவும், பொதுமக்கள் வாக்குப் பதிவு மையங்களுக்கு வரும் சிரமத்தை குறைக்கவும் ஐதராபாத்தில் உள்ள அமையங்களுக்கு இந்தச் சேவையை வழங்க உள்ளதாக இணை நிறுவனர் பவன் குண்டுபலி தெரிவித்துள்ளார்.