வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (11:02 IST)

திருமணமான முதல் நாளே மணமகள், மணமகன் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொலை..!

திருமணமான முதல் நாளே மணமகன், மணமகள் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொண்டதில் மணமகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் மணமகன் உயிருக்கு போராடி வருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நவீன் குமார் என்பவருக்கும் லிகிதா ஸ்ரீ என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இரு தரப்பு பெற்றோர்கள் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடந்த நிலையில் திருமணம் முடிந்ததும் தம்பதியினர் தேநீர் அருந்துவதற்கு உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு நவீன் குமார் மற்றும் லிகிதா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறி அருகில் இருந்த கத்தியை எடுத்து ஒருவர் வரை ஒருவரை ஒருவர் குத்திக் கொண்டதாக தெரிகிறது.

இந்த கத்திக்குத்து சம்பவத்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மணமகள் லகிதா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மணமகன் மட்டும் ரத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலையும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் இந்த சம்பவம் காரணமாக மணமகள், மணமகன் தரப்பில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Mahendran