தொடர்புடைய செய்திகள்
- ஆரம்பம் முதல் திமுக வேட்பாளர் முன்னிலை.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிலவரம்..!
- காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்தும் அண்ணாமலைக்கு நன்றி.! செல்வப்பெருந்தகை..!!
- விக்கிரவாண்டியில் 82.48% வாக்குப்பதிவு.. அதிமுக தொண்டர்கள் புறக்கணித்தது தேர்தலையா? எடப்பாடி பழனிசாமியையா?
- விக்கிரவாண்டி இடைத்தேர்தல்.. வாக்களிக்க வந்த பெண்ணிற்கு கத்திக்குத்து.. பெரும் பரபரப்பு..!
- என் தொகுதிக்கு வந்தா.. ராகுல்காந்தியை பூட்டி வைத்து அடிப்பேன்! - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
விக்கிரவாண்டி உள்பட 13 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜக கூட்டணிக்கு பின்னடைவா?
நாடு முழுவதும் ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி உள்பட 13 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்த நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் பஞ்சாப்பில் உள்ள ஜலந்தர் மேற்கு தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி உள்ளது. மொத்தமுள்ள 13 தொகுதியில் ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் முன்னிலையில் மற்ற 12 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி – இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே போட்டி நிலவி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் அமர்வாரா தொகுதியில் மட்டுமே பாஜக முன்னிலையில் உள்ளதாகவும் மற்ற அனைத்து தொகுதிகளிலும் எதிர்கட்சிகள் முன்னிலையில் இருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதியில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக சுமார் 15346 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது என்பது தெரிந்ததே.
Edited by Mahendran