ஆற்றுக்குள் நீந்தி சாராயம் வாங்கச் செல்லும் மதுப்பிரியர்கள்
கடலூர் மாவட்டத்தில் மதுகுடிப்பவர்கள் ஆற்றில் நீந்திச் சென்று சாராயம் வாங்கிக் குடிப்பதால் உயிரிழப்புகள் ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரொனா பாதிப்பை தடுக்கும் வகையில் வரும் 31 ஆம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் மதுபானக் கடைகளின் விலை அதிகரித்துள்ளது. அதனால் மதுப்பிரியர்கள் சாராயம் குடிக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றில் அவர்கள் ஒரே இடத்தில் கரையைக் கடக்காமல் ஆற்றில் குறுக்கே நீந்திச் செல்கின்றனர்.
இதில், ஆற்றில் திடீரென வெள்ளம் வந்தால் ஆபத்து வரும் நிலையுள்ளதாலும் சாராயத்தைக் குடிப்பதாலும் போலீஸார் கொரோனா காவலுக்கு மத்தியில் இவர்களைக் கண்காணிப்பது பெரும் சிரமத்தை உண்டாக்கியுள்ளது.