பெண் சாமியார் வல்லுறவு வழக்கில் 12 வயது சிறுவன் கைது…. மூன்றாம் குற்றவாளியாக சேர்ப்பு!

Last Updated: ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (09:00 IST)

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆசிரமம் ஒன்றில் புகுந்து நான்கு பேர் 46 வயது பெண் சாமியாரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள ரணிதிஆசிரமத்துக்குள் நுழைந்த நான்கு பேர் 46 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தனர். இது சம்மந்தமான புகாரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை சொல்லியுள்ளார்.

ஆசிரமத்துக்குள் நுழைவதற்கும் அங்குள்ளவர்களை துப்பாக்கி முனையில் மிரட்டுவதற்கும் 12 வயது சிறுவன் ஒருவன் உதவியதாக அவர்கள் சொன்ன தகவலை கேட்டு போலிஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் அந்த சிறுவனையும் கைது செய்து வழக்கில் மூன்றாம் குற்றவாளியாக அவரை சேர்த்துள்ளனர். நான்காவது நபரை தேடி வருகின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :