வெள்ளத்தில் அடித்துச் சென்றவரை காப்பாற்றிய 12 வயது சிறுவன் !
உத்ரகாண்ட் மாநிலம் நைனிடாலில் உள்ள கோஷி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து ஒரு மனிதரை ( 24 வயது )அடித்துக்கொண்டு போனது.
அதைப் பார்த்த பலரும் எதுவும் செய்யாமல் நின்றிருந்தனர். ஆனால் ஒரு 12 வயதுள்ள சிறுவன் துணிச்சலாக ஆற்றில் குதித்து அந்த நபரை காப்பாற்றினான்.
சிறுவனை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.