புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 31 ஜனவரி 2022 (10:23 IST)

28 நாட்களில் 12 நாட்கள் லீவ்: கொடுத்த வச்ச வங்கி ஊழியர்கள்!

பிப்ரவரி மாதம் துவங்க உள்ள நிலையில் அம்மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. 

 
பிப்ரவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியலையும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. பிப்ரவரி மாதம் துவங்க உள்ள நிலையில் அம்மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பிப்ரவரி மாதத்தில் 12  நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 
 
விடுமுறை நாட்களின் பட்டியல்: 
2 பிப்ரவரி - சோனம் லோச்சார் (காங்டாக்கில் வங்கி மூடல்)
5 பிப்ரவரி -  சரஸ்வதி பூஜை/ஸ்ரீ பஞ்சமி/பசந்த பஞ்சமி (அகர்தலா, புவனேஷ்வர், கொல்கத்தாவில் வங்கிகள் மூடல்)
6 பிப்ரவரி  -  ஞாயிற்றுக்கிழமை
12 பிப்ரவரி - மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை
13 பிப்ரவரி -  ஞாயிற்றுக்கிழமை
15 பிப்ரவரி -  முகமது ஹஸ்ரத் அலி பிறந்தநாள் (இம்பால், கான்பூர், லக்னோவில் வங்கிகள் மூடல்)
16 பிப்ரவரி - குரு ரவிதாஸ் ஜெயந்தி (சண்டிகரில் வங்கிகள் மூடல்)
18 பிப்ரவரி -  டோல்ஜாத்ரா (கொல்கத்தாவில் வங்கி மூடல்)
19 பிப்ரவரி -   சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாபூர், மும்பை, நாக்பூரில் வங்கிகள் மூடல்)
20 பிப்ரவரி - ஞாயிற்றுக்கிழமை
26 பிப்ரவரி - நான்காவது சனிக்கிழமை
27 பிப்ரவரி -   ஞாயிற்றுக்கிழமை