1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 6 ஜூலை 2021 (07:57 IST)

அமீர்கான் - கிரன்ராவ் உறவு போல் நாங்கள் இருக்கின்றோம்: பாஜக-சிவசேனா உறவு குறித்து மூத்த தலைவர்!

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாகவும் ஆனால் அதே நேரத்தில் நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக மட்டும் தான் இல்லை என்றும் எங்கள் குழந்தைகளுக்காக ஒன்றாக பயணிப்போம் என்றும் தெரிவித்திருந்தார் இந்த அறிவிப்பு ரசிகர்களை குழப்பத்தை ஏற்படுத்தியது
 
இந்த நிலையில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் எங்கள் கட்சியும் பாஜகவும் அமீர்கான் மற்றும் அவருடைய மனைவியுடைய உறவு போன்றது என்றும் நாங்கள் இருவரும் நண்பர்களாகவும் இல்லை எதிரிகளாகவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்
 
பாஜக மற்றும் சிவசேனா கட்சிகள் இணைந்து சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு அதன் பின் பிரிந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாஜக சிவசேனா உறவு குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ‘நாங்கள் இருவரும் இந்தியா - பாகிஸ்தான் போல் சண்டை போடவும் இல்லை, அமீர்கான் -கிரன்ராவ் போல் ஒன்றாகவும் இல்லை என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார் அவரது இந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.