தொடர்புடைய செய்திகள்
- பறவைகள் சரணாலயத்தை சுருக்குவது கண்டனத்திற்குரியது! – ட்வீட் பறக்கவிட்ட டிடிவி!
- சென்னையில் கொரோனா தீவிரம்! தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்த அரசு தீவிரம்!
- 10 நிமிஷம் தான் டைம்: அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்!
- அய்யா.. ரொம்ப கஷ்டம்.. உதவி செய்யுங்க! – உதவி கேட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை!
- ரூ.10.90 கோடி அபராதம் வசூல்: காவல்துறை தகவல்!
10ஆம் வகுப்பு தேர்வு இல்லை, ஆல் பாஸ்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை வரும் 15ஆம் தேதி நடத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தத் தேர்வை நடத்த வேண்டாம் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மட்டுமன்றி இன்று சென்னை உயர்நீதிமன்றமும் கருத்துக் கூறியது
இது குறித்த வழக்கு இன்று நடைபெற்ற போது சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் காரசாரமான கேள்விகளைக் கேட்டது என்பதும் அதற்கு தமிழக அரசு தரப்பில் பதில் கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் இன்றி அனைத்து மாணவர்களும் பாஸ் என்று அறிவிக்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு இல்லை என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது
இதே போன்று தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் பாஸ் என அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
அடுத்த கட்டுரையில்
