ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 8 ஜூன் 2020 (17:55 IST)

சென்னையில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு ?

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 6 அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சென்னையில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் 38,198 ஊழியர்கள் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் இதுவரை 1.5 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னையில் இயங்கிவரும் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் 200 ஆக அதிகரிக்கப்படும் எனவும் 2 லட்சம் பேருக்கு ஹோமியோபதி மருந்து கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.