திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 13 ஜூன் 2019 (20:07 IST)

அம்மாடீ....’பிரபல தனியார் ’நிறுவனத்தில் 100 கோடீஸ்வரர்கள் !

இதுதானே தேசத்தின் துடிப்பு என்ற டாடா நிறுவனத்தின் விளம்பரம் சில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. அந்த விளம்பரத்துக்கு ஏற்பவே டாடா தேசத்து மக்களின் அபிமானம் பெற்ற நிறுவனமாக உள்ளது.
இந்நிலையில் அந்த நிறுவனத்தில் பல்லாயிரக்கான ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இதில் ஐடி நிறுவனமான டாடா கன்சண்டன்ஸி நிறுவனத்தில் மட்டும் சுமார் 103 ஊழியர்கள் வரை ஆண்டுக்கு 1 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுப் பணியாற்றிவருவதாகத் தகவல் வெளியாகிறது.
 
அதாவது கடந்த 2018 -2019 ஆம் ஆண்டில் ஊழியர்களுக்காக வழங்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகிறது. 
 
மேலும் அந்த நிறுவனத்தின்  சீஇஓ ராஜேஷ் கோபிநாதன் , மற்றும் சிஓஓ என் ஜி சுப்பிரமணியம் தவிர்த்து 103 ஊழியர்களின் வருட சம்பளமானது 1 கோடி ரூபாய்க்கு அதிகமாக இருக்கிறது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகம் என்று தகவல் தெரிவிக்கின்றன.