தனியார் பள்ளிகளுக்கு மேலும் சலுகை – கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள் !
கட்டட அனுமதிப் பெறாத தனியார் மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் அதற்கான அங்கிகாரத்தைப் பெற ஓராண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
முறையான கட்டட அனுமதி பெறாமல் இயங்கிவரும் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் 2019ஆம் ஆண்டு மே மாதத்துக்குள் முறையான அனுமதியினைப் பெற வேண்டுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதிரடியாக இந்த உத்தரவை மேலும் ஓராண்டு நீட்டித்துப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி கட்டட வரைபட அனுமதியை நகர் மற்றும் ஊரமைப்புத் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பள்ளிகள் கட்டட அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் தொடர்ந்து பள்ளிகளை நடத்த அனுமதிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் மே மாதத்தோடு முடிவடையும் நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி மேலும் ஓராண்டுக்கு இந்த கால அவகாசத்தை அதிகரித்துள்ளது பள்ளிக் கல்வித்துறை. இதற்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாகியுள்ளது.