வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 22 மார்ச் 2021 (20:37 IST)

தமிழக பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு…

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் இன்று பாஜக தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், மீனவர்களுக்கு ஆண்டுதோறூம் ரூ.6000 வழங்க்கப்படும்.
தமிழகத்தில் பூரணம் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
8,9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட் வழங்கப்படும்.
18 முதல் 23 வயதுவரை உள்ள பெண்களுக்கு இலவச ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
விவசாயத்திற்கு அரசு நிதி ஒதுக்கீட்டுடன்  தனி பெட்ஜெட் போடப்படும்.
ரேசன் பொருட்கள் வீடு தேதி விநியோகப்படும்.
தேசிய கல்விக் கொள்கை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப்படும்.
பஞ்சமி நிலங்கள் மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்கப்படும்.

 
தமிழகத்தில் 50 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.