வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (14:59 IST)

ஹூண்டாய், கேப்சி நிறுவனங்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும்! – காவல்துறையில் புகார்!

காஷ்மீர் ஒற்றுமை தினத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட ஹூண்டாய், கேஎப்சி உள்ளிட்ட நிறுவனங்களின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5ம் தேதியை பாகிஸ்தான் அரசு காஷ்மீர் ஒற்றுமை தினமாக கொண்டாடி வருகிறது. அந்த நாளில் ஹூண்டாய், கேஎப்சி, பீட்சா ஹட் உள்ளிட்ட நிறுவனங்களின் பாகிஸ்தான் கிளைகள் சமூக வலைதளங்களில் இட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய இறையாண்மையை குலைக்கும் விதமாக அந்நிறுவனங்கள் பதிவிட்டுள்ளதால் அந்நிறுவன தயாரிப்புகளை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்து ஹேஷ்டேகுகளை வைரலாக்கி வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்தன.

இந்நிலையில் டெல்லி வழக்கறிஞர் ஒருவர் இந்த நிறுவனங்களுக்கு எதிராக டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் “ஹூண்டாய், கியா, கேஎப்சி, பிஸ்ஸா ஹட் ஆகிய நிறுவனங்களின் பதிவை நீக்க வேண்டும். பாகிஸ்தானில் தங்கள் வியாபாரம் லாபம் அடைவதற்காக, இந்த நிறுவனங்கள் இந்தியாவின் இறையாண்மையை தாழ்த்தி பேசி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளது மிகவும் வருந்தத்தக்கது. இது சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது” எனக் புகார் தெரிவித்துள்ளார்.