இஸ்ரேல் போராட்டத்தில் துப்பாக்கி சூடு- 16 பேர் பலி
இஸ்ரேல் நாட்டில் எல்லையில் உள்ள காசா பகுதியில் போராட்டம் நடத்தி வந்த ஹமாஸ் அமைப்பினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் 16 பேர் பலியாகியுள்ளனர்.
காசா பகுதி இஸ்ரேல்- பாலஸ்தீன எல்லையில் உள்ளது. நேற்று, இங்கு பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இஸ்ரேல் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தை அடக்க இஸ்ரேல் படையினர் முயற்சித்து வந்தனர். ஆனால், அவர்களால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அதனால் அவர்கள் துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வீசி போரட்டக்காரர்களை தடுக்க தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பாலஸ்தினத்தை சேர்ந்த 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.