1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 3 மே 2021 (08:10 IST)

முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை பற்றி யோசிக்க வேண்டும்… உச்சநீதிமன்றம் அறிவுரை!

இந்தியாவில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் அதை சமாளிக்க முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து மத்திய மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர். மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் பற்றாக்குறை என பலவிதமான இடர்பாடுகளால் அதிகளாவில் கொரோனா மரணங்கள் நடந்து வருகின்றன. இது சம்மந்தமான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரித்து வருகிறது.

அது சம்மந்தமான விசாரணையின் போது ‘கொரோனா தொற்று சங்கிலியை உடைக்க முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டும். அப்படி அமல்படுத்துவது பொருளாதாரத்தை பாதிக்கும் என்றால் முழு ஊரடங்குக்கு பதில் மாற்று என்ன என ஆலோசிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளது.