வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (17:35 IST)

பாஜகவினரின் சவாலை வென்று காட்டிய ’’சிங்கப்பெண்’’மம்தா பானர்ஜி…

பாஜக மூத்த வேட்பாளர் சுவேந்து அதிகாரி தனக்கு எதிராக வெற்றி பெற்றுக் காட்டுமாறு சவால்விடுத்திருந்த நிலையில் அதை வென்றுள்ளார் திரிம்ணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி

இந்தியா முழுவதிலும் 5 மாநிலங்களில் இன்று ஓட்டுஎண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மம்மா மீண்டும் ஆட்சி அமைப்பார் எனவுன், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் அமைக்கும் எனவும் கூறப்படும் நிலையில் அசாமில் பாஜக ஆடசியைக் கைப்பற்றியது.

மேற்க் வங்க மாநிலத்தில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட 1200 வாக்குகள் வித்தியாசத்தில் அம்மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக மூத்த வேட்பாளார் சுவேந்து அதிகாரி தனக்கு எதிராக வெற்றி பெற்றுக் காட்டுமாறு சவால்விடுத்திருந்த நிலையில் அதை வென்றுள்ளார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவர் சுவேந்து அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க மாநிலத்தில் உடைந்த காலுடன் பிரசாரம் செய்து அபார வெற்றி வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள மம்தாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.