செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 2 மே 2021 (20:28 IST)

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: தமிழில் டுவிட் போட்ட அமித்ஷா

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்துள்ள திமுகவுக்கு தமிழக தலைவர்களும் தேசிய தலைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சற்றுமுன் பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் அமைச்சர் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களும் தனது டுவிட்டர் பக்கத்தில் மூலம் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன் என்றும் தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் அமித்ஷா இந்த டுவிட்டை பதிவு செய்துள்ளார்/ அதுவும் இந்த ட்விட்டை அவர் தமிழில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
 
5 ஆண்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக மக்களுக்கு முழுமனதோடு சேவை ஆற்றியுள்ளது. மக்கள் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வதோடு பாரத பிரதமர் 
நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என தமிழக சகோதர சகோதரிகளுக்கு உறுதி அளிக்கின்றேன்.