The Paradise Review: eநானியின் தி பாரடைஸ் – படம் எப்படி இருக்கு?
டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி நடிப்பில் உருவாகியுள்ள தி பாரடைஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நானியுடன் கயாடு லோஹர், மோகன் பாபு, ராகவ் ஜுயல், சோனாலி குல்கர்னி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓதெலா இப்படத்தை இயக்கியுள்ளார்.
பீரியர்ட் கதைகளமான இதில் 1980-களின் பின்னணியில், ஹைதராபாத்தின் பாரடைஸ் பகுதியில் வாழும் சவாரி சமூகத்தை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சமூகத்தைச் சேர்ந்த ஜடல் என்ற வேடத்தில் நானி நடித்துள்ளார். தனது சமூகத்தின் உரிமைக்காக அவர் எதிர்கொள்ளும் போராட்டம், குடும்ப உறவுகள் மற்றும் காதல் ஆகியவை கதையின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. அனிருத்தின் பின்னணி இசை படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.
தி பாரடைஸ் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இட்ஸ் சினிமா என்ற பக்கத்தில் படத்தின் சூழல், காட்சியமைப்பு, நடிகர்களின் நடிப்பு மற்றும் பரபரப்பு என அனைத்தும் வேற லெவலில் இருக்கிறது. ஒவ்வொரு காட்சியும் நம்மை தொடர்ந்து படத்துடன் ஒன்ற வைத்திருக்கிறது. உண்மையிலேயே ஒரு சிறப்பான சினிமா அனுபவம்! என்று கூறப்பட்டுள்ளத்து.
கிருஸ்டோபர் கனகராஜ் தனது பக்கத்தில் நானியின் மாஸ் அவதாரம் அவருக்குப் பொருந்தவில்லை. வில்லன் கதாபாத்திரம் நகைச்சுவையாக உள்ளது. கயாடு கதாபாத்திரம் வலுவாக இல்லை. அம்மா கதாபாத்திரமும் பலவீனமாக இருக்கிறது.
அதிக சத்தத்துடன் இருக்கும் பின்னணி இசை மற்றும் மோசமான எடிட்டிங் படத்தின் அனுபவத்தை பாதிக்கின்றன. முதல் 20 நிமிடங்கள், இடைவேளை காட்சி மற்றும் KCR தொடர்பான காட்சிகள் மட்டும் நன்றாக இருக்கின்றன.
குறைகள்: காட்சிகளை அமைத்திருக்கும் விதம், கலர் டோன், அதிகப்படியான ஸ்லோ மோஷன் காட்சிகள், தொடர்பில்லாமல் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள், உணர்வில்லாத அம்மா–மகன் உறவு மற்றும் சரியாக அமையாத கதை சொல்லும் முறை. மொத்தத்தில், இது ஒரு சுமாரான அனுபவம். பார்க்கும்போது பெரிய அளவில் ஈர்ப்பு ஏற்படுத்தவில்லை
வெங்கி ரிவ்யூஸ் தனது பக்கத்தில் ஆரம்பம் சுவாரஸ்யமாக இருக்கிறது. குறிப்பாக இடைவேளை காட்சி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால், அதன் பிறகு படம் பெரிதாக ஈர்க்காமல் சலிப்பாக செல்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

