திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Cauveri Manickam
Last Modified: வியாழன், 18 மே 2017 (16:58 IST)

சங்கிலி புங்கிலி கதவ தொற – முன்னோட்டம்

ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம், நாளை ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தை, ஐக் இயக்கி  உள்ளார். இவர், கமலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ‘முனி’, ‘காஞ்சனா’ போல் காமெடி பாதி, ஹாரர் மீதி என்ற ஃபார்முலாவில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.



சூரி, கோவை சரளா, தம்பி ராமையா, இளவரசு, தேவதர்ஷினி, ‘நான்  கடவுள்’ ராஜேந்திரன், மயில்சாமி என ஏகப்பட்ட காமெடி நடிகர்களுடன், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
 
இயக்குநர் அட்லீயின் ‘ஏ ஃபார் ஆப்பிள்’ நிறுவனம், ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத்  தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.எஸ். சுரேஷ் எடிட் செய்துள்ளார். படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். நடிகர் ஜெய், நடிகை  அக்‌ஷரா கவுடா இருவரும் இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.