செவ்வாய், 16 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Cauveri Manickam (Suga)
Last Updated : வியாழன், 7 செப்டம்பர் 2017 (18:07 IST)

கதாநாயகன் – முன்னோட்டம்

கதாநாயகன் – முன்னோட்டம்
விஷ்ணு விஷால், கேத்ரின் தெரேசா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கதாநாயகன்’.


 

 
முருகானந்தம் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘கதாநாயகன்’. அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரேசா நடித்துள்ளார். 
 
சூரி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
 
ஷான் ரோல்டன், இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷ்ணு விஷாலே சொந்தமாகத் தயாரித்த இந்தப் படத்தை, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுகிறது. 
 
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்தப் படம், ரொமாண்டிக் ஆக்‌ஷன் காமெடிப் படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் தொடக்கத்தில், சிம்பு குரல் கொடுத்துள்ளார்.