திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2017 (11:16 IST)

விஜய் சேதுபதி மனசு யாருக்கு வரும்?

விஜய் சேதுபதியின் நல்ல மனசு யாருக்கு வரும்? என்ற கேள்வி எழுந்துள்ளது கோடம்பாக்கத்தில்.
 
 
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல், மறுபடியும் விஜய் சேதுபதியை வைத்து ‘ஜுங்கா’  என்ற படத்தை இயக்குகிறார். ‘விக்ரம் வேதா’வில் மென்மையான லோக்கல் ரவுடியாக நடித்த விஜய் சேதுபதி, இந்தப்  படத்தில் ஃபாரீன் ஸ்டைலிஷ் டானாக நடிக்கப் போகிறார். ‘வனமகன்’ சயிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
 
இந்தப் படத்தின் கதையைக் கேட்டு ஓகே சொன்ன விஜய் சேதுபதி, பட்ஜெட்டைக் கேட்டதும், ‘நானே தயாரிக்கிறேன்’ என்று  சொல்லிவிட்டாராம். காரணம், பட்ஜெட் தொகை 20 கோடி ரூபாய். இதுவரை இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் விஜய் சேதுபதி  நடித்ததில்லை என்பதால், மற்ற தயாரிப்பாளர்களை ரிஸ்க் எடுக்க வைக்க வேண்டாம் என நினைத்து தானே தயாரிக்கிறாராம். இந்த நல்ல மனசு யாருக்கு வரும்? என்பதுதான் கோடம்பாக்கத்தின் பேச்சாக இருக்கிறது.
 
பிரான்ஸில் 60 சதவீதமும், சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் 40 சதவீதமும் ஷூட்டிங் நடைபெற உள்ளது.