திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: புதன், 6 செப்டம்பர் 2017 (12:38 IST)

ஓவியாவுக்காக உருவாகும் ஹாரர் படம்?

ஓவியா நடிப்பில் வெளியான ஹாரர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகலாம் எனத் தெரிகிறது.


 

 
டிகே இயக்கத்தில் வெளியான படம் ‘யாமிருக்க பயமே’. கிருஷ்ணா, கருணாகரன், ரூபா மஞ்சரி, ஓவியா ஆகியோர் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களை ஈர்த்தது. அதன்பிறகு, ஜீவா நடிப்பில் டிகே இயக்கிய ‘கவலை வேண்டாம்’ படம் சரியாகப் போகவில்லை. எனவே, மறுபடியும் ஹாரர் கதையைக் கையில் எடுக்கிறார் டிகே.

‘பிக் பாஸ்’ மூலம் ஓவியாவுக்கு ஏகப்பட்ட புகழ் சேர்ந்திருப்பதாலும், தன்னுடைய ஹாரர் கான்செப்ட் ஓகே ஆனதாலும், ‘யாமிருக்க பயமேன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என நினைக்கிறார் டிகே. இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது.