ஆந்திரா மெஸ் - முன்னோட்டம்

CM| Last Modified வியாழன், 21 ஜூன் 2018 (19:04 IST)
ஜெய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆந்திரா மெஸ்’ படம் நாளை ரிலீஸாக இருக்கிறது.
 
ஜெய் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘ஆந்திரா மெஸ்’. ஒரு பண்ணையார், அவருடைய இளம் மனைவி, நான்கு திருடர்கள் - இவர்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை.
 
‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘ரிச்சி’ ஆகிய படங்களில் நடித்த ராஜ் பரத், இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். பூஜா தேவரியா, தேஜஸ்வினி இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார். இதற்காக கூத்துப்பட்டறையில் இவருக்கு 15 நாட்கள் நடிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
 
இந்தப் படத்துக்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்க, முகேஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். நிர்மல் கே பாலா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். நாளை இந்தப் படம் ரிலீஸாகிறது.


இதில் மேலும் படிக்கவும் :