வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By CM
Last Modified: வியாழன், 21 ஜூன் 2018 (13:21 IST)

‘டிராபிக் ராமசாமி’ - முன்னோட்டம்

விக்கி இயக்கியுள்ள ‘டிராபிக் ராமசாமி’ படம் நாளை ரிலீஸாக இருக்கிறது.
சமூகப் போராளியான டிராபிக் ராமசாமி, பல்வேறு சமூக விஷயங்களுக்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றவர். இந்தத் தள்ளாத வயதிலும்  சமூக விஷயங்களுக்காகப் போராடி வருகிறார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘டிராபிக் ராமசாமி’ என்ற படம் உருவாகி இருக்கிறது.
 
விக்கி என்பவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இவர், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். தன் சீடனுக்காக டிராபிக் ராமசாமி வேடத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரே நடித்ததோடு மட்டுமின்றி, இந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் மனைவியாக ரோகிணி நடிக்க, சீமான், குஷ்பூ, ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, மனோபாலா, இமான் அண்ணாச்சி, அம்மு ரவிச்சந்திரன்,  லிவிங்ஸ்டன், சேத்தன், மதன்பாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.
 
குகன் எஸ் பழனி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். பா.விஜய், கபிலன் வைரமுத்து, முத்தமிழ் ஆகிய மூவரும்  பாடல்கள் எழுதியுள்ளனர்.