1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By siva
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (21:38 IST)

’மாஸ்டர்’ புகைப்படத்தை வெளியிட்டு மாளவிகா உருக்கம்!

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு உருக்கமான தகவலையும் அந்த படத்தின் நாயகி மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்
 
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நேறுடன் 50 நாள் ஆகிவிட்டது. இதனையடுத்து நேற்று படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் கொண்டாடி வந்தனர். இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் நாயகியான மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் 
 
விஜய், லோகேஷ் கனகராஜ், ரம்யா உள்பட படக்குழுவினர்களுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அவர் இந்த படம் எனக்கு வாழ்நாள் முழுவதும் ஞாபகம் வைத்திருக்க கூடிய வகையில் உள்ள ஒரு படம் என்றும் இந்த படம் எனக்கு பல நண்பர்களை கொடுத்திருக்கிறது என்றும் பெரும் ஆளுமைகள் உடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்