திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (19:27 IST)

விஜய் சேதுபதியின்’’ யாதும் ஊரே யாவரும் கேளீர்’’ பட டீசர் ரிலீஸ் !

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரேபடத்தில் டீசர் இன்று ரிலீசாகவுள்ளதாகபடக்குழு கூறியபடி இன்று  இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகநாத் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளீர்.

இப்படத்தில் ஆகாஷ் மேகா, ரகுஆதித்யா, நடிகர் விவேக் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.#YaadhumOoreYaavarumKelir

இந்நிலையில், இப்படம் குறித்த புதிய அப்டேர் எப்போதும் வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

எனவே, நேற்று விஜய்சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை இப்படத்தின் டீசர் வெளியாகும் எனத்  தகவல் வெளியிட்டார்.அதன்படி  ’’யாதும் ஊரே யாவரும் கேளீர்’’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது இணையதளத்தில் இப்படத்தின் டீசர் வைரலாகி வருகிறது.