1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 20 ஆகஸ்ட் 2022 (18:12 IST)

தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகை!

kaniska soni
பிரபல சீரியல் நடிகை ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகை கனிஷ்கா சோனி. இவருக்கு  ‘தியா அவுர் பார்த்தி ஹம்’  என்ற சீரியல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார்.  தற்போது,  ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இவர் நடிப்பில் வெளியான சீரியல் தமிழில் ரீமே செயப்பட்ட கணவன் என் தோழன் என்ற பெயரில் வெளியானது.

இந்த நிலையில், இவர் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதாக தனது இன்ஸ்டாவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.  அதில், எனக்கு இனிமேல் ஆண் துணையே வேண்டாம், நான் என்னைக் காதலிக்கிறேன். என் கனவுகள் நிறைவேறிவிட்டது. அதனல நான் என்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் எனத் தெரிவவித்துள்ளார்.