1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்
  6. பங்குச் சந்தை சரிவு

NSE,nifty, BSE,sensex | பங்குச் சந்தை சரிவு

நிஃப்டி
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, சென்ஸ் 100, நிப்டி 24 புள்ளி சரிவுடன் தொடங்கியது. இன்று அந்நிய நாடுகளில் பாதகமான போக்கு இருப்பதால், இந்திய பங்குச் சந்தைகளிலும் பாதிப்பு இருக்கும்.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இன்று காலை சீனா, மலேசியா, இலங்கை தவிர, மற்ற பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை பாதகமான நிலை இருந்தது. ஆனால் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 33.90 (NSE-nifty) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 4,795.65 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 102.74 (BSE-sensex) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 16,161.56 ஆக சரிந்தது.

மிட் கேப் 28.21, பி.எஸ்.இ 500-33.83, சுமால் கேப் 44.09 புள்ளிகள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.42 மணியளவில் 952 பங்குகளின் விலை அதிகரித்தும், 1190 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 74 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளக் கிழமை, ரூ.228.77 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.294.20 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
About Writer
Webdunia