1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash

வாய பொளக்காதீங்க... பிட்காய்ன் மதிப்பு என்ன தெரியுமா??

மெய்நிகர் நாணயமான பிட்காய்ன் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 
 
உலகில் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணம் நேரடியாக பயன்படமால் இணையத்தில் மட்டுமே பயன்படுகிறது. இதற்கு கிரிப்டோ கரன்சி என்று பெயர். இதில் ஒன்றுதான் பிட்காயின். 
 
பிட்காயினை பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்றலாம், இதற்கு வடிவம் இல்லை. சமீப காலமாக பிட்காயினின் மதிப்பு அதிகரித்து வருகிறது. 
 
ஆம், மெய்நிகர் நாணயமான, பிட்காய்ன் மதிப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 1 பிட்காய்ன் விலை, இந்திய மதிப்பில், ரூ.17.03 லட்சம் என்ற உயரத்தை எட்டியிருக்கிறது. பிட்காய்ன் மதிப்பு, நடப்பு ஆண்டில் மட்டும், 220% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.