1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today share market sensex and nifty uptrend

வாரத்தின் கடைசி நாளிலும் உயர்ந்த சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

share
கடந்த இரண்டு வாரங்களாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் உயர்ந்து வரும் நிலையில் இந்த வாரமும் பெரும்பாலான நாட்கள் உயர்ந்தது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் சென்செக்ஸ்  உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் நம்பிக்கையை பெற்று விட்டனர். 
 
இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 250 புள்ளிகள் சென்செக்ஸ் தொடர்ந்து 58 ஆயிரத்து 550 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 70 புள்ளிகள் வரை உயர்ந்தது 17 ஆயிரத்து 450 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக பங்குச்சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்து வருவதோடு புதிய முதலீட்டாளர்களும் பெருகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!