நேற்றைய வீழ்ச்சிக்கு பின் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை: இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென பங்குச்சந்தை 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்ததால் முதலீட்டாளர்கள் கடும் அச்சமடைந்தனர்.
இந்நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இன்று பங்குச்சந்தை ஓரளவு உயர்ந்துள்ளது. மும்பை பங்கு சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சற்றுமுன் 189 புள்ளிகள் உயர்ந்து 73 ஆயிரத்து 686 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 223 ஒன்று என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஏபிசி கேப்பிட்டல். ஐடி பீஸ், மணப்புரம் கோல்டு உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் சிப்லா, ஐடிசி, கல்யாண் ஜூவல்லர்ஸ், கரூர் வைசியா உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது..!
Edited by Siva