1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. today share market sensex and nifty status

2வது நாளாக பங்குச்சந்தை இன்றும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

பங்குச்சந்தை
பங்குச்சந்தை நேற்று சுமார் 200 புள்ளிகள் சரிந்த நிலையில் இன்றும் பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பங்குச்சந்தை கடந்த வாரம் மிகச்சிறந்த அளவில் உயர்ந்த நிலையில் இந்த வாரம் திங்கட்கிழமையும் பங்கு சந்தை உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் செவ்வாய் புதன் ஆகிய இரண்டு நாட்களும் தொடர்ச்சியாக பங்குச்சந்தை சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 160 புள்ளிகள் சரிந்து 73 ஆயிரத்து 512 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 79 புள்ளிகள் சார்ந்து 22, 278 என்ற புள்ளிகளில் வரித்தகமாகி வருகிறது.
 
 பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் பங்கு சந்தைகள் முதலீடு செய்வது லாபகரமானது என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
இன்றைய பங்குச்சந்தையில் பேங்க் பீஸ், கோல்ட் பீஸ், எஸ்பிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, ஐடிசி, கரூர் வைசியா வங்கி பங்குகள் குறைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுகிறதா? மணிசங்கர் ஐயர் போட்டியிட ஆர்வம்..!