திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 5 மார்ச் 2024 (11:32 IST)

2 நாட்களாக உயர்ந்த பங்குச்சந்தை இன்று திடீர் சரிவு.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!

கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் நேற்று திங்கட்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச் சந்தை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதலே சரிவில் உள்ளது என்பதும் குறிப்பாக மும்பை பங்குச்சந்தை நிஃப்டி 415 புள்ளிகள் குறைந்து 73 ஆயிரத்து 459 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு நிப்டி 109 புள்ளிகள் சரிந்து 22,295 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், கோல்ட் பீஸ், கல்யாண் ஜுவல்லர்ஸ், மணப்புரம் கோல்டு ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் கரூர் வைசியா வங்கி, ஐடிசி, ஐடி பீஸ்,  சிப்லா, பேங்க் பீஸ் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
 இரண்டு நாள் ஏற்றத்திற்கு பிறகு இன்று பங்குச்சந்தை சரிந்தாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தகுந்த ஆலோசனை பெற்று உரிய முறையில் பங்குச்சந்தைகள் முதலீடு செய்தால் லாபம் பார்க்கலாம் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 
 
Edited by Siva