2வது நாளாக பங்குச்சந்தை சரிவு.. லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்த முதலீட்டாளர்கள்..!
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் நேற்று 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 135 புள்ளிகள் சார்ந்து 72,169 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் தேசிய பங்கு சந்தையான நிஃப்டி 66 புள்ளிகள் சரிந்து 21, 739 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. பங்குச்சந்தை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தினாலும் இனிவரும் நாட்களில் பங்குச்சந்தை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இன்றைய பங்குச் சந்தையில் ஏபிசி கேப்பிட்டல், சிப்லா, மணப்புரம் கோல்டு, கரூர் வைசியா வங்கி ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் கல்யாண் ஜுவல்லர்ஸ், ஐடிசி கோல்ட் பீஸ் உள்ளிட்ட பங்குகள் அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Edited by Siva