நேற்றைய சரிவை இன்று மீட்ட பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!
பங்குச்சந்தையின் சென்செக்ஸ் நேற்று சுமார் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில் இன்று பங்குச்சந்தை 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே உயர்ந்து வருகிறது என்பதும் சற்று முன் சென்செக்ஸ் 117 புள்ளிகள் உயர்ந்து 72 ஆயிரத்து 913 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 30 புள்ளிகள் அதிகரித்து 22,155 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. நேற்று சரிந்த அளவுக்கு இன்று உயரவில்லை என்றாலும் இன்று மதியத்திற்கு மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் எனவே பங்குச்சந்தை மீண்டும் உயர்வில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஏபிசி கேப்பிட்டல். சிப்லா. ஐடிசி. கரூர் வைஸ்யா வங்கி ஆகிய பங்குகள் உயர்ந்து உள்ளதாகவும் மணப்புரம் கோல்டு. கல்யாண் ஜுவல்லர்ஸ். பேங்க் பீஸ் ஆகிய பங்குகள் சரிந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva