நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று மீண்டும் பங்குச்சந்தை சரிவு.. மதியத்திற்கு மேல் மாற்றமா?
நீண்ட நாட்களுக்கு பிறகு, நேற்று பங்குச் சந்தை சுமார் 600 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், இன்று மீண்டும் பங்குச் சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் மீண்டும் சோகமாக உள்ளனர்.
நேற்று காலை பங்குச் சந்தை சரிவில் தொடங்கினாலும், அதன் பின்னர் மதியம் 12 மணிக்குப் பிறகு உச்சத்தில் சென்றது. சுமார் 900 புள்ளிகள் வரை உயர்ந்த நிலையில் வர்த்தக முடிவின்போது 600 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்தது என்பதும் இதனால் கடந்த வார நஷ்டம் ஓரளவு சரி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நேற்றைய ஏற்றத்திற்கு பின்னர் இன்று மீண்டும் பங்குச் சந்தை உயரும் என்று எதிர்பார்த்தவர்கள் தற்போது பங்குச் சந்தை மீண்டும் சரிந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 440 புள்ளிகள் சரிந்து 79,555 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 156 புள்ளிகள் சரிந்து 24,300 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எல் அண்ட் டி, ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதுடன், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva